×

பாகிஸ்தான் டிரோன் கதம்... கதம்...

பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பிறகு, குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தின் சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் (டிரோன்) சுற்றி வந்து உளவு பார்த்தது. இதை கண்டுபிடித்த ராணுவம், சிறிய ரக ராக்கெட் மூலம் அதை சுட்டு வீழ்த்தியது. கட்ச் மாவட்டத்தின் அப்டாசா தாலுகா, நங்காடாத் கிராமத்தில் நேற்று அதிகாலை 6 மணியளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதை கேட்டு வெளியே வந்த கிராமத்தினர் அங்கு ஆளில்லா விமானம் ஒன்றின் பாகங்கள் நொறுங்கி கிடப்பதைக் கண்டனர். உள்ளூர் போலீசார் அதன் பாகங்களை எடுத்து, ராணுவத்திடம் ஒப்படைத்தனர். அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan , Pakistan drone ,katam ... katam ...
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்