மசூத் மச்சான் யூசுப் ‘மர்கயா’

இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் மைத்துனரும், தளபதியுமான யூசுப் அசார் கொல்லப்பட்டான். யூசுப் அசார் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்தான். கந்தகார் விமான கடத்தலில் மூளையாக செயல்பட்டவர்களின் இவனும் ஒருவன்.  பாலகோட், சகோதி, முசாபராபாத் பகுதிகளில் நான்கு முகாம்களை நடத்தி வந்திருக்கிறான். இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடியாக புகுந்த இந்திய விமானப்படை, இந்த அமைப்பின் தீவிரவாத முகாம்களை தரைமட்டமாக்கியது. இதில் காடுகள் சூழ்ந்த பாலகோட் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் யூசுப் அசார் கொல்லப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதி யூசுப் அசார் உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டது அந்த அமைப்பினருக்கும், பாகிஸ்தானுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: