×

மத்திய, மாநில ஆட்சியாளர்களை விரட்ட மக்கள் தயாராகி விட்டனர் வெற்றிப்பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை செய்திராத வகையில், ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் பங்கேற்புடனான ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதற்காகவே, தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களைக் கொண்டு அந்தந்த மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் சிற்றூர் செயலாளர்கள் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 2019 ஜனவரி 9ம் நாள் கலைஞரின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் உள்ள புலிவ லத்தில் தொடங்கிய ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்றேன். அதே நாளில் தமிழகத் தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் பங்கேற்ற ஊராட்சி சபை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

ஏறத்தாழ ஒன்றரை மாதகாலம் நீடித்த ஊராட்சி சபை கூட்டங்களை பிப்ரவரி 25ல் விளாத்திக்குளத்தில் நிறைவு செய்தேன். 2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வக்கில்லாத வழிதேடாத ஆட்சியாள ர்களால் ஒவ்வொரு ஊராட்சியும் அனுபவிக்கிற வேதனைகளைத்தான் மக்களின் வார் த்தைகளிலிருந்து திமுகவினர் கேட்டறிந்தனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் வாழ்கிற பெண்கள் திரண்டு வந்து மத்திய, மாநில ஆட்சி யாளர்களால் தாங்கள் படுகிற வேதனைகளை எடுத்துக் கூறினார்கள். ஊராட்சி சபைக் கூட்டங்களில் திமுக பொறுப்பாளர்கள் பேசியது சிறிதளவுதான். பெரும்பாலான நேரம் மக்களின் குரலே ஊரெங்கும் ஒலித்தது. பிரதமர் நாற்காலியில் இன்னும் சில நாட்கள் இருக்கப் போகிற நரேந்திர மோடியும், முதல்வர் நாற்காலியில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமியும் தங்கள் ஆட்சியில் நாட்டு மக்களை படுத்துகிற பாடு அனைத்தும் ஊராட்சி சபை கூட்டங்களில் ஓங்கி எதிரொலிக்கிறது.

அடுத்தது அமையப் போவது யார் ஆட்சி என்பதை அறுதியிட்டுக் கூறுவதாக அமைந் தது ஊராட்சிகள் தோறும் திமுக நடத்திய கூட்டங்கள். கூட்டங்கள் நடைபெறாத ஊராட்சிகளிலும் விரைவில் கூட்டங்கள் நடத்தப்பட வேண் டும் என்பதை பொறுப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊராட்சி சபை கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டிருப்பது போலவே, ஒவ்வொரு ஊராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான பூத் கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 20 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவத்துடன் வாக்குச்சாவடி முகவர்களையும் தேர்வு செய்து அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியினருடனான சந்திப்புகளையும் திமுக நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் வாக்குச்சாவடி வாரியாக நடத்தியுள்ளார்கள்.

திருவாரூர் புலிவலத்தில் ஊராட்சி சபை கூட்டத்தைத் தொடங்கி, விளாத்திக்குளத்தில் நிறைவு செய்தவரை 21 தொகுதிகளுக்கும் உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிக்கான பூத் கமிட்டி உறுப்பினர்களையும் அழைத்து தனியாகக் கூட்டம் நடத்தி, தேர்தல் பணிக ளை திமுக மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து ஆலோசனை நடத்தினேன். வில்லில் இருந்து விடுபடும் கணையாகக் திமுகவினர் தயாராக இருப்பது தெரிந்தது. மதவெறி மத்திய அரசையும், மண்தரையில் மண்டியிட்டுக் கிடக்கும் மாநில ஆட்சியாளர்களையும் மக்கள் தூக்கியெறியும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையவிருக்கின்றன. ஊராட்சி சபை கூட்டங்கள் மூலம் வெற்றி விதைகளை ஊன்றியிருக்கிறோம். விதைத்தது விளைந்து, அறுவடைக்குத் தயாராகும்வரை விழிப்புடன் இருந்து நம் வியர்வைத் துளிகளால் ஜனநாயகப் பயிரைக் காத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மதவெறி மத்திய அரசையும், மண்தரையில் மண்டியிட்டுக் கிடக்கும் மாநில ஆட்சியாளர்களையும் மக்கள் தூக்கியெறியும் வகையில் தேர்தல் முடிவு அமையும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rulers ,state ,wins ,MK Stalin , Central, State Governance, MK Stalin
× RELATED உ.பி. மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி