×

காஷ்மீர் தாக்குதலில் பலியான கயத்தாறு வீரர் மனைவி பேட்டி விமானப்படை பதிலடி பெருமையாக உள்ளது

கோவில்பட்டி: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிகள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது பெருமையாக உள்ளது என சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியான தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி நேற்று அளித்த பேட்டி: எனது கணவர் (சுப்பிரமணியன்) வீரமரணமடைந்ததால் மன வேதனை அடைந்துள்ளேன்.

எனக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இப்பணிக்கான ஆணையை சென்னையில் முதல்வர் என்னிடம் வழங்க உள்ளார். இதற்காக சென்னைக்கு செல்கிறேன். சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது மிகவும் வேதனையாக இருந்தது. தற்போது இந்திய விமானப்படை பதிலடி கொடுத்து வருவது பெருமையாக உள்ளது. இதனால் எங்களது கிராமமே மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய ராணுவத்துக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராணுவத்துக்கு என்றும் நன்றி கடன் பட்டுள்ளோம். இவ்வாறு கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kashyap ,raid victim ,interview ,Air Force , Kashyap raid, victim's wife's , proud of the Air Force
× RELATED என்னை சந்திக்க ரூ.5 லட்சம் வேண்டும்: அனுராக் காஷ்யப் ‘கறார்’