×

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி தமிழகத்தில் ‘மீம்ஸ் கிரியேட்டர்’களுக்கு மவுசு: சமூக வலைதளங்களில் சூடுபிடித்த பிரசாரம்

சென்னை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ‘மீம்ஸ் கிரியேட்டர்’ களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களால் சமூக வலைதளங்களில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தல்களிலும் அரசியல் கட்சியினர் பல்வேறு விதமான வியூகங்களை வகுப்பது வழக்கம். இதில் தேர்தல் நடப்பதற்கு, 6 மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் தங்களது கட்சியின் சின்னம், வேட்பாளருடன் சென்று பிரச்சாரம் செய்வார்கள்.ஆனால் தற்போது தேர்தல் கமிஷன் பல்வேறு விதமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் மாற்று வழியில் தேர்தல் பிரச்சாரங்களை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்த பிரச்சாரத்திற்கு சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு சம்மந்தப்பட்ட சமூகவலைதளங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வருவதே காரணம். இவை ஊடகங்கள் சொல்ல முடியாததைக்கூட எளிதாக சொல்லிவிடுகின்றன. மேலும் சில தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் காரணமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இன்டர்நெட் எளிதாக கிடைக்கிறது.இதனால் அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை சமூகவலைதளங்களில் முடுக்கி விடுவதன் மூலம் மற்ற கட்சியினர் மீது மக்களிடத்தில் அதிருப்தியை உருவாக்க முடியும் என கருதுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் தேர்தலில் எளிதாக வெற்றி பெறமுடியும் எனவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.இது ஒருபுறம் ேகலி, கிண்டலை ஏற்படுத்தியிருந்தாலும், மற்றொரு புறம் தேர்தலில் இந்தவகையிலான மீம்ஸ்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் ேநாக்கர்கள் கருதுகின்றனர். இதேபோல் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது எதிரிகளை காலி செய்ய சமூகவலைதளங்களை பயன்படுத்த திட்டம் வகுத்திருக்கிறார்கள்.

இதனால், ‘மீம்ஸ் கிரியேட்டர்’களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. அவர்களை படைப்பு அடிப்படையிலும், மாதம், வார சம்பளத்தின் அடிப்படையிலும் நியமனம் செய்ய அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் மக்களிடத்தில் எளிதாக புரிதலை ஏற்படுத்தும் கிரியேட்டர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தை வழங்கவும் திட்டமிட்டுள்ளன.இதுபோன்ற சம்பவங்களால் நடக்கவுள்ள தேர்தலில் அரசியல் கட்சியினர் ஒருவரை, ஒருவர் மாறி ‘மீம்ஸ்’ மூலம் விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.  இதேபோல் மற்றொரு புறம் தங்கள் தொகுதியில் பணியில் இருக்கும் வேட்பாளர்களை பற்றி, பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Campaign ,Meams Creators ,Tamilnadu , election , parliamentary election,'Meams Creators'
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...