×

டெல்லி ராஷ்டிரபதி பவனில் 'காந்தி அமைதி பரிசு'விருதினை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: டெல்லி ராஷ்டிரபதி பவனில் 2015,16,17 மற்றும் 2018ம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில்,  

* 2015ம் ஆண்டிற்கான விருதினை கன்னியாகுமரியை சேர்ந்த விவேகானந்தா விவேகானந்த கேந்திரா என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டது. கிராமப்புற மேம்பாடு, கல்வி, இயற்கை வளங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் இவர்களின் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.

* 2016ம் ஆண்டிற்கான விருதினை, சுலாப் இன்டர்நேஷனல் மற்றும் அக்சயா பாத்ரா அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் சுகாதார நிலை மற்றும் விடுதலை மேம்படுத்த சுலாப் அமைப்பு அளித்து வரும் பங்களிப்பிற்காகவும், சர்வதேச அளவில் இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்ததற்காக அக்சயா பாத்ரா அமைப்பிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

* இதேபோன்று 2017ம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு விருதினை - ஏக்கல்பியன் அறக்கட்டளைகு வழங்கப்பட்டது.

* 2018ம் ஆண்டிற்கான விருதினை, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் தொழுநோய் நீக்குதல் தொடர்பான பங்களிப்பு அளித்தமைக்காக ஸ்ரீ யோகே சாசாகவா என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டது.

கடந்த 1995-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துவங்கி அவரது நினைவாக அமைதிக்கான காந்தி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசால் வழங்கப்படும் இந்த பரிசு தொகுப்பில் ஒரு கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் ஒரு நேர்த்தியான பாரம்பரிய கைவினை / கைத்துண்டு உருப்படி போன்றவை இடம்பெறும். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு குழு, இந்த பரிசுக்கு உரியவர்களை தேர்ந்தெடுத்தது. அதில், பிரதமரை தவிர உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் மல்லிகர்ஜூனா கார்கே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்வானி ஆகியோர் குறிப்பிட்ட ஆண்டிற்கான வெற்றியாளர்களை கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தேர்வு செய்தனர். அதன்படி, இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காந்தி அமைதி பரிசினை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajnath Govind ,Rashtrapati Bhavan , Ramnath Govind,Gandhi Peace Prize,Delhi,Rashtrapati Bhavan
× RELATED ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட ஏற்பாடு...