×

முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிப்பு : நிவாரணம் கிடைக்காததால் வீடுகளை சீரமைக்க முடியாமல் மக்கள் தவிப்பு

முத்துப்பேட்டை:  கஜாபுயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்காததால் வீடுகளை சீரமைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் கடந்த ஆண்டு  நவம்பர்15ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கஜா புயலின் கோரத்தாண்டவத்தால்   மக்கள் வீடுகள் உடமைகள் மற்றும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டனர்.  இதுநாள்வரை அரசின் உதவி இப்பகுதி மக்களுக்கு இன்னும் முழுமையாக நிலையில் உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டு 100நாட்களை கடந்தும் இன்னும் மீளாத துயரத்தில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலருக்கும் இன்னும் அரசின் நிவாரண தொகை வங்கி கணக்கில்  ஏறவில்லை.

இதில் குறிப்பாக மஞ்சளங்காடு பகுதியில் பலருக்கு இதுநாள்வரை எந்தவொரு நிவாரணமும் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் இந்த கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட துறைக்காடு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மக்கள்  தினந்தோறும் சென்று கேட்டு வருகின்றனர். இதனால் நிவாரண கிடைக்காமல் சேதமான தங்களது வீடுகளை சீரமைக்க முடியாமல் சேதமான வீட்டில் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர். அதனால் காலத்தில் விடுபட்ட இப்பகுதி மக்களுக்கு நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்துஜெயராமன் கூறுகையில். நானும் எனது மனைவியும் இங்கு வசித்து வருகிறோம். புயலில் எங்களது வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டது. அதிகாரிகள் கணக்கீடு செய்து எடுத்து சென்றும் நிவாரணம் வந்து சேரவில்லை. இதனால் வீட்டை சீரமைக்க வழியின்றி தவித்து வருகிறேன். இதுநாள்வரை எந்தவொரு நிவாரணமும் கிடைக்கவில்லை.கலெக்டர் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.  முத்துப்பேட்டை பகுதியில் கஜாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் முழுமையாக கிடைக்க வில்லை. ஆளுங்கட்சியினர் முழுவதும் பயனடைந்து விட்டனர். அரசு இதற்கு தனி குழு அமைத்து நிவாரணம் கிடைக்காத  விடுபட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Ghaziabad ,storm ,Kajan , Muthupettai, Ghaja storm, relief
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி