×

சருகுவலையபட்டியில் 2,000 பேர் பங்கேற்ற மீன்பிடி திருவிழா : கட்லா, ரோகு, விரால், அயிரை சிக்கியது

மேலூர்: மேலூர் அருகே 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மீன் பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. மதுரை மேலூர் அருகில் உள்ள சருகுவலையபட்டியில் உள்ளது பொன்னழகி அம்மன் கோயில். இக்கோயிலுக்கு சொந்தமான சிராவத்தான் கண்மாயில் கிராமம் சார்பாக தண்ணீர் வந்தவுடன் மீன்குஞ்சுகள் வாங்கி விடப்படும். விவசாய பணிகள் முடியும் நிலையில் கண்மாயில் நீர் குறைந்துவிடும். அதே நேரத்தில் 3 மாதத்திற்கு முன்பு விடப்பட்ட மீன்குஞ்சுகள் பெரிதாக வளர்ந்திருக்கும். இந்த மீன்களை குத்தகைக்கு விடாமல் அனைத்து கிராம மக்களும் பிடித்து உண்பவதற்கு வசதியாக ஒரு நாளில் அனைவரும் மீன்களை பிடித்துக் கொள்ளும் மீன்பிடி விழா நடத்தப்படும்.

தண்டோரா மூலம் மீன்பிடி விழா குறித்து சுற்று பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் நேற்று அதிகாலை சிராவத்தான் கண்மாய் முன்பு கூடினர். ஊர் பெரியவர்கள் கொடியசைத்து விழாவை துவக்கி வைத்தனர். பரந்து விரிந்த கண்மாயில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தது. கரையில் சுற்றி திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை மற்றும் கச்சாவால் மீன்களை பிடித்தனர். கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் 2 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டது. கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Festival ,participants , Carukuvalaiyapatti, fish, festival
× RELATED கோயில் திருவிழாவில் இரு...