சுற்றிவளைத்த இந்திய விமானப்படை...... பயந்தோடிய பாகிஸ்தான் விமானம்

ஜம்மு-காஷ்மீர்: இந்திய விமானப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பிச்சென்றதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை தாக்கியபோது அதனை முறியடிக்க பாகிஸ்தானின் F16 ரக போர்விமானம் வந்துள்ளது. இந்தியாவின் மிராஜ் 2000 ரக விமானங்கள் அதிகளவில் இருந்ததால் பாகிஸ்தான் விமானம் திரும்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. பாலகோட், சக்கோத்தி, முஷாபாராபாத் ஆகிய 3 பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவீசி தகர்க்கப்பட்டன. இன்று அதிகாலை 3.30 மணியளவில் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் முகாமை குண்டுவீசி தகர்க்கப்பட்டது. இதில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அவசர ஆலோசனை
தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாமுகமது, இஸ்லாமபாத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உஷார் நிலையில் இந்திய ராணுவம்
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால், அதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக, சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்திய ராணுவம், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய கடற்படை, விமானப்படை ஆகியவை உஷார் படுத்தப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்திய விமானப்படை தனது சிவில்...