×

ஒரே கம்பத்தில் கொடி ஏற்றுவதில் அதிமுக-அமமுக இடையே மோதல்: கூடலூரில் கம்பத்தையே அகற்றிய போலீஸ்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில்  ஒரே கம்பத்தில் கொடி ஏற்றுவதில் அதிமுக, அமமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இப்பகுதியில் அமமுக தொழிற்சங்கம் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் காலையில்  அதிமுக அணியினர் கொடி ஏற்றி உள்ளனர். பின்னர் அமமுக வினர் அதே கம்பத்தில் கொடி ஏற்ற வந்தனர். ஒரே கம்பத்தில் கொடி ஏற்றுவதில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சரவணன் என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து தாங்கள் ஏற்றிய கொடியை அகற்றி கொள்வதாக அதிமுக அணியினர் கூறியுள்ளனர். ஆனால் மாலை 3 மணி வரை கொடி அகற்றப்படவில்லை.

இந்நிலையில்,  அதிமுக அணியினர் ஏற்றிய கொடியை கழற்றி அமமுக வினர் மீண்டும் மாலை 3 மணியளவில் கொடி ஏற்றினர். மீண்டும் அதிமுக அணியினர் மாலை 6 மணியளவில் அங்கு வந்து அந்த கொடியை இறக்கி தங்கள் கொடியை ஏற்றி சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அமமுகவினர் காவல் நிலையத்தை இரவு9மணியளவில் முற்றுகையிட்டனர்.  இரு தரப்பினரிடமும் பேச்சுநடத்தி, இறுதியாக இரவு  11 மணியளவில் அதிமுக கொடியை அகற்றினர். இதையடுத்து அதிரடியாக அங்கிருந்த கொடி கம்பத்தை போலீசார் அகற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : conflict ,AIADMK-Ammuku ,Kallur , AIADMK,Ammk
× RELATED இருதரப்பு மோதலில் 7 பேர் கைது