×

40 எம்பி, 21 எம்எல்ஏ தொகுதிகளில் போட்டியிட திமுக விருப்ப மனு விநியோகம் தொடங்கியது: அண்ணா அறிவாலயத்தில் கட்சியினர் குவிந்தனர்

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. இதற்காக ஏராளமான திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயம் வந்து விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தொகுதி உடன்பாடு முடிந்து காங்கிரசுக்கு 10 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து,  1-3-2019 முதல் 7-3-2019 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க  வேண்டும். வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ.25,000, விண்ணப்ப படிவம் ரூ.1000  வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை ஏற்கனவே  அறிவித்தது. அதன்படி, 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 21 சட்டமன்ற தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு வழங்குவது நேற்று தொடங்கியது. இதையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமான திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். அவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன், காசி முத்து மாணிக்கம், கண்ணதாசன், துரை வீரமணி உள்ளிட்டவர்கள் மனுக்களை வாங்கினார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Distributor , 40 MP, 21 MLA Module, DMK, Option Manu
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்