×

17 ரூவா தந்தா விவசாயிங்க கோபமெல்லாம் போய்டுமோ...? : பாஜவை விளாசிய ப.சி.

புதுடெல்லி: ‘‘கடனில் சிக்கியுள்ள விவசாயிகளை சாந்தப்படுத்த, பிரதமரின் கிஷான் திட்டம் மூலம் பா.ஜ அரசு ஓட்டுக்கு பணம் வழங்குகிறது’’ என டிவிட்டரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார். பிரதமரின் கிஷான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுவதை முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கடந்த 2 நாட்களாக டிவிட்டரில் விமர்சனம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘விவசாய குடும்பத்தினரின் ஓட்டுக்களை பெற, அதிகாரப்பூர்வமாக பாஜ அரசு  ஒரு குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுக்கிறது. இதை தேர்தல் ஆணையத்தால் தடுத்த நிறுத்த முடியாதது மிகவும் கேவலம்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் டிவிட்டரில் விடுத்த செய்தியில், ‘‘ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கியுள்ளார். விவசாயிகளை கடனிலும், துயரத்திலும் தள்ளிவிட்ட பிறகு, ஒரு குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.17 வழங்கி, அவர்களை சாந்தப்படுத்த பா.ஜ அரசு கடைசி நேர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையை நாங்கள் அரசிடம் கூறியபோது, இதுபற்றி சிந்திக்கவில்லை. ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கி வருகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.  

வதேரா ஐயா ப்ளீஸ் வாங்க

மொரதாபாத்: உ.பி.யின் மொராதாபாத் நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் பல இடங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “தொகுதியை சேர்ந்த ராபர்ட் வதேரா அவர்களே, மொரதாபாத் மக்களவை தொகுதியில் இருந்து நீங்கள் போட்டியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போதைக்கு தேர்தலில் போட்டியிட ப்போவதில்லை என்று வதேரா தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rewa Tandara Farmers Gopalallam Boedmo ,Biju , 17 Rewa Tandara Farmers, Gopalallam Boedmo ...? : Biju
× RELATED ஒடிசா பிரசாரத்தில் 9 சேம் சைடு கோல்...