×

அயர்லாந்து ஒயிட்வாஷ் தோல்வி டி20 தொடரை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அசத்தல்: ரஷித் கான் ஹாட்ரிக்

டேராடூன்: அயர்லாந்து அணியுடனான 3வது டி20 போட்டியில், 32 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. முகமது நபி அதிகபட்சமாக 81 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். ஹஸ்ரபுல்லா 31, கேப்டன் அஸ்கர் ஆப்கன் 20, நஜீப் டரகாய் 17 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து 32 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கெவின் ஓ பிரையன் 74 ரன் (47 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பால்பிர்னி 47 ரன் (33 பந்து, 7 பவுண்டரி), டாக்ரெல் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில், ரஷித் கான் 4 ஓவரில் 27 ரன் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் 4 பந்தில் 4 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஜியாஉர் ரகுமான் 2 விக்கெட் வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி 3-0 என ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரைவென்றது. அந்த அணியின் முகமது நபி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி நாளை மறுநாள் பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்குகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ireland ,T-20 ,Afghanistan ,Rashid Khan , Ireland Whitewash, Afghanistan, Rashid Khan
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...