×

டோனி போன்ற வீரர்களுக்கும் அது கடினமான ஆடுகளம் தான்... மேக்ஸ்வெல் சொல்கிறார்

விசாகப்பட்டிணம்: முதல் டி20 போட்டி நடைபெற்ற விசாகப்பட்டிணம் ஆடுகளம் டோனி போன்ற சிறந்த வீரர்களுக்கும் கூட மிகக் கடினமான ஒன்று தான் என்று ஆஸி. ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய முதல் டி20 போட்டி, விசாகப்பட்டிணம் ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கடைசி பந்து வரை பரபரப்பாக அமைந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இந்திய இன்னிங்சின்போது அனுபவ வீரர் எம்.எஸ்.டோனி 37 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன் மட்டுமே எடுத்தது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிரடியாக விளாசித் தள்ளும் அவரது இயல்பான ஆட்டத்திறன் மங்கிவிட்டது, கண்ணுக்கும் கைக்குமான ஒருங்கிணைப்பு சுத்தமாக இல்லை,

ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விடுங்கள்... என்று ட்விட்டரில் ரசிகர்கள் தகவல் பதிந்து வருகின்றனர். இந்த நிலையில், விசாகப்பட்டிணம் ஆடுகளம் ரன் குவிப்புக்கு அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை. டோனி போன்ற மிகச்சிறந்த வீரர்களுக்கும் கூட அது கடினமான ஆடுகளம் தான் என்று ஆஸி. ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆடுகளம் ரன் குவிப்புக்கு பெரிதாக ஒத்துழைக்கவில்லை. பந்து மிகக் குறைவான அளவே எழும்பியது. சிறந்த வீரரான டோனி போன்றவர்களுக்கும் கூட இத்தகைய ஆடுகளம் கடினமான ஒன்று தான். மறு முனையில் விக்கெட் சரிந்ததால், நிலைத்து நின்று விளையாட வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருந்தது.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டால் டோனியின் ஸ்டிரைக் ரேட் நியாயமானதே. அவரால் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே அடிக்க முடிந்தது என்பதில் இருந்தே பிட்ச்சின் தன்மையை புரிந்து கொள்ளலாம். அதே சமயம், அவரை அதிக ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்திய எங்கள் பவுலர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்’ என்றார். 2வது டி20 போட்டி பெங்களூருவில் நாளை இரவு நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maxwell ,Tony , Tony, hard pitch, Maxwell
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில்...