×

கன்னியாகுமரி அருகே தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சி... வெல்டிங் வைத்து பாதுகாப்பு பெட்டகம் உடைப்பு

கன்னியாகுமரி: தபால் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தை மர்மநபர்கள் வெல்டிங் வைத்து கொள்ளையடிக்க முயன்றது சுசீந்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அமைந்துள்ள தபால் நிலையத்தை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை தபால் நிலையத்துக்கு சென்ற ஊழியர்கள் தபால் நிலையத்தின் தகவு மற்றும் பாதுகாப்பு பெட்டகம் வெல்டிங் வைத்து உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்துறைக்கு புகார் அளித்ததன் பேரில் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பெட்டகத்தில் பணத்தை வைக்காமல் வேறு இடத்தில் பணத்தை வைத்து இருந்ததால் பணம் கொள்ளை போவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுசீந்திரம் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bandits ,post office ,Kanyakumari , Try,post, Kanyakumari , locker ,welding
× RELATED பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்...