×

சொத்து குவிப்பு வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஜாமீன் மனு தள்ளுபடி

லாகூர்: சொத்து குவிப்பு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நவாஸ் ஷெரிப் மகள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியது நிரூபனமானதால் பாகிஸ்தான் பிரதமரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பிரதமராக நீடிக்க தகுதியற்றவர் நவாஸ் ஷெரீப் கூறியது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் ஜீலை 6-ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபிற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து லண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் மரியம், மற்றும் மருமகன் முகமது சப்தார் ஆகியோர் பாகிஸ்தான் கொண்டுவரப்பட்டு ஷெரிப் லாகூரில் உள்ள கோட் லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் வழங்க கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர் பரூக் அக்தர் கயானி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

முன்னதாக நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம்  நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து லண்டனில் இருந்து குல்சூம் உடல் லாகூருக்கு கொண்டு வரப்பட்டது. குல்சூம் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக செரீப், மரியம், முகமது சப்தார் ஆகியோர் 5 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு முதலில் 12 மணி நேரம் மட்டுமே பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதை நீட்டிக்க வேண்டும் என்று நவாஸ் செரீப்பின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையேற்றுக் கொண்ட அரசு, அவர்களுக்கு 3 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nawaz bin Laden , Prime Minister Nawaz, bail plea, Pakistan
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...