×

வந்தாச்சி ஐபிஎல்….

* ராயல் சேலஞ்ச்ரஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரரான ஏபி டிவில்லியர்ஸ்(தென் ஆப்ரிக்கா) நேற்று சென்னை வந்தார். பெங்களூர் அணியின் பரவல் தடுப்பு பாதுகாப்பு குமிழியில் இணைந்த டிவில்லியர்ஸ் 7 நாட்கள் தனிமையை தொடருவார். டிவில்லியர்ஸ் வந்து இறங்கியதை ‘விண்கலம் தரை இறங்கிவிட்டது’ என்று பெங்களூர் நிர்வாகம் உற்சாகமாக குறிப்பிட்டுள்ளது. நவ்தீப் சைனி, சைமன் கட்டிச்(ஆஸ்திரேலியா) உள்ளிட்டவர்கள் தனிமையை முடித்து ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டனர். டிவில்லியர்ஸ்(37) கடந்த 2011ம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகம் ஜோஷ் ஹசல்வுட்(ஆஸி) விலகியுள்ளார். இதுகுறித்து ஜோஷ், ‘கடந்த ஆண்டு ஜூலை முதல் சுமார் 10 மாதங்களாக தனிமைப்படுத்துதலில், பாதுகாப்பு குமிழிகளில் இருந்து விட்டேன். அந்த சோர்வை போக்க அடுத்து 2 மாதங்கள் வீட்டிலும், ஆஸ்திரேலியாவிலும் செலவிட முடிவு செய்துள்ளேன். அதுதான் டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர்களுக்கு தயாராக உதவும். அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளேன்’ என்று கூறியுள்ளார். ஜோசுக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்கலாமா என்று சென்னை இன்னும் முடிவு செய்யவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஜோஷ், 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார். நடப்புத் தொடரில் இருந்து விலகும் 3வது வீரர் ஹசல்வுட். ஏற்கனவே ஜோஷ் பிலிப்(பெங்களூர்), மிட்செல் மார்ஷ்(ஐதராபாத்) ஆகியோர் விலகியுள்ளனர். இந்த மூவரும் ஆஸி வீரர்கள்.* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்  சென்னை வந்து சேர்ந்துள்ளானர். விமானத்தில் ஜானி பேர்ஸ்டோ விமான பயணத்தின் போது சக வீரர் கேன் வில்லியம்சன்னுடன் ஜாலியாக விளையாடும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ளது. கூடவே யார்க்கர் கிங் நடராஜன் படத்துடன் ‘இவரின் ஆட்டத்தை மீண்டும் காண நீங்கள் இனியும் காத்திருக்க முடியாது’ என்ற வாசகங்களையும் சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ளது.  * டெல்லி அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஸ்மித் நேற்று லண்டனில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டார். விமானம் ஏறுவதற்கு முன்பு மனைவி டானி, செல்ல நாயுடன் எடுத்துக் கொண்ட படத்தை சமூக ஊடகத்தில் ஸ்மித் வெளியிட்டுள்ளார். கூடவே ‘டானி உன்னை ரொம்ப மிஸ் பண்ணப்போறேன்; டெல்லி உன்னை விரைவில் சந்திக்கப்போகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். நேராக மும்பை செல்லும் ஸ்மித், அங்கு முகாமிட்டிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைகிறார்.* கடந்த சீசனில் ‘மூத்தோர் அணி’ என்று கிண்டலுக்கு ஆளானது சென்னை அணி. அதற்கு ஏற்ப  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் முதல் முறையாக இழந்தது. அதனால் இந்த முறை கேப்டன் டோனி, துணைக் கேப்டன் ரெய்னா இருவரும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கூடவே இருவரும் அணியில் உள்ள இளம் வீரர்களின் ஆட்டத்திறன்களையும் கண்காணித்து வருகின்றனர். அதனால் இந்த சீசனில், சென்னை அணியில் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.* பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி  நேற்று சென்னை வந்து சேர்ந்தார். கொரோனா பரிசோதனை முடிந்ததையடுத்து அணிக்கான பாதுகாப்பு குமிழியில் 7 நாட்களுக்கு தனிமையை தொடருவார்….

The post வந்தாச்சி ஐபிஎல்…. appeared first on Dinakaran.

Tags : Vandachi ,IPL… ,AB de Villiers ,South Africa ,Royal Challengers Bangalore ,Chennai ,Bangalore ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி