×

91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: சிறந்த வெளிநாட்டு படமாக 'ரோமா'தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ்: 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது.  ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது . ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.

91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் திடீரென விலகியதால் தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடக்கிறது. 91-வது ஆஸ்கர் விருதுக்கு, தி ஃபேவரைட் மற்றும் ரோமா படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தலா 10 பிரிவுகளில் இரண்டு படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Oscar Award Festival Kolakalam , Oscar Award Festival,
× RELATED மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...