×

கோவை அருகே 7 கிராம விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரம்: விரைவில் பணி துவக்கம்

கோவை: கோவை தொண்டாமுத்தூர், வடவள்ளி, சோமையம்பாளையம் உள்ளிட்ட ஏழு கிராம விவசாய நிலங்கள் வழியாக  கூடுதல் மின் தேவைக்காக மிக உயரழுத்த மின்பாதை அமைக்கும் பணியை விரைவில் துவங்க தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோவையின் மேற்கு பகுதியில் உள்ள சோமையம்பாளையம், வடவள்ளி, கலிக்கநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், தென்கரை, தென்னமநல்லூர், தேவராயபுரம் ஆகிய பகுதிகள் விவசாய பூமியாக உள்ளது. இப்பகுதியில், பெரும்பாலும் தென்னை, வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது.  மேற்குதொடர்ச்சி மலையின் அருகிலுள்ளதால் வனவிலங்குகள் வெளியேறி பயிர்களை சேதம் செய்து வருகிறது. இந்நிலையில், விவசாய நிலத்தில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியை விரைவில் துவங்க தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள 110 கிலோ வாட் திறன் கொண்ட மின் நிலையத்தில் இருந்து,

துடியலூரில் உள்ள மின்நிலையம் வரையிலான சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் , வடவள்ளி உள்ளிட்ட 7 கிராமங்களில் மாதம்பட்டி ஒற்றை சுற்று மின்பாதை கோபுரம் எண் 12ல் இருந்து, சோமையம்பாளையத்தில் உள்ள துணைமின் நிலையம் வரை புதிய இரட்டை சுற்று மின்கோபுரத்தில், கூடுதலாக ஒரு ஒற்றை சுற்று மின்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டவர் அமைக்கும் நிலங்கள் அனைத்தும் விவசாய நிலங்களாகும். இதற்கான அரசாணையை மின் தொடரமைப்பு கழகம் கடந்த 4ம் தேதி வெளியிட்டது. இது தொடர்பான முறையீடுகள் தெரிவிக்க ஒரு மாத அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் கருத்துகளை கேட்காமல் பணிகளை விரைந்து துவங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறுகையில், விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பது தொடர்பாக ரகசிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tower ,lands ,Coimbatore , Coimbatore, high power tower, work start
× RELATED கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன்...