×

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் கைதான லிப்ட் ஆபரேட்டர் பலி: விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட லிப்ட் ஆபரேட்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன், வாட்டர் மேன் உள்ளிட்ட பலர், அதே குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது சிறுமியை பல மாதங்கள் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.  அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இதையடுத்து அனைவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் மகிளா நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தன. தற்போது, இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 பேரும் சென்னை மகிளா நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அப்போது விசாரணையின் நடுவே வழக்கின் 10வது குற்றவாளியான திருமுல்லைவாயலை சேர்ந்த பாபு (37) என்பவர் மயங்கி விழுந்தார்.

பின்னர் நீதிபதியின் உத்தரவின்படி அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து, மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. பின்னர் நுரையீரல் பிரச்னை அதிகமான பாபு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனையில் உயிரிழந்தவரின் தாய், தன் மகனை மருத்துவர்கள் விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக கதறி அழுதார். ஏற்கனவே அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் அனைவருமே குற்றம் செய்யவில்லை, பொய் வழக்கு என்று வழக்கறிஞர்கள் கூறிவருகின்றனர். மேலும் வழக்கு விசாரணையில் சிறுமி தரப்புக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்பட்டு வருவதாக கூறி உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lift operator ,Relatives , Ionize girl, lift operator, kills
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...