×

சென்னை மாநகர பேருந்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்களுக்கு ‘ஓ.டி.’ நிறுத்தம்: அதிகாரிகளின் நடவடிக்கையால் அதிர்ச்சி

சென்னை: ‘எம்டிசி’யில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ‘ஓ.டி.,’ வழங்க நிர்வாகம் மறுக்கிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் தொழிலாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பல்வேறு இடங்களுக்கு தினசரி, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இயக்கப்படும் பஸ்கள் பலநேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வது வழக்கம். குறிப்பாக காலை, 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரை கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் சம்பந்தப்பட்ட பஸ்களை இயக்கும் டிரைவர்களும், நடத்துனர்களும் நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கூடுதலாக பணியாற்றும் நேரத்திற்கு தகுந்தார் போல், ரூ100 முதல், ரூ250 வரை ‘ஓ.டி.,’ வழங்கப்பட்டு வந்தது.

வாரத்தின் அனைத்து நாட்களுக்கும் இவ்வாறு ‘ஓ.டி.,’ வழங்கப்பட்டு வந்தது. தற்ேபாது ஞாயிற்றுக்கழமைகளில் ேபாக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். இதனால் நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்திலேயே, பணியை ஓட்டுனரும், நடத்துனரும் முடித்துக்கொள்ள இயலும். எனவே மற்ற நாளில் ‘ஓ.டி.,’ வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டிரைவர், கண்டக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். இதுகுறித்து டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது:கூட்ட நெரிசலில் சிக்கும் போது நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அப்போது நிர்வாகம் குறிப்பிட்ட தொகையை ‘ஓ.டி.,’யாக வழங்கி வந்தது. இந்நிலையில் சமீபகாலமாக அவ்வாறான தொகை மறுக்கப்படுகிறது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். நீண்ட நேரம் பணியாற்றியும் அதற்கான பலன் கிடைப்பதில்லை. சில இடங்களில் அதிகாரிகளிடம் போராடி வாங்க வேண்டிய நிலையும் உள்ளது. எனவே எங்களின் நலன் கருதி ‘ஓ.டி.,’ வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். ஞாயிற்றுக்கழமைகளில் ேபாக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். எனவே மற்ற நாளில் ‘ஓ.டி.,’ வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus stand ,Chennai Corporation , Chennai City bus, Driver, Conductor, 'OD' parking
× RELATED சாலையோர கடைகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம்