×

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் பென்சிக் சாம்பியன்

துபாய்: பிரபல டென்னிஸ் தொடரான துபாய் டூட்டி பிரீ மகளிர் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவுடன் மோதிய பென்சிக் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த குவித்தோவா, அதிரடியாக விளையாடி பென்சிக்கின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். குவித்தோவா 2வது செட்டை  6-1 என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட்டில் பென்சிக் முழு திறமையையும் வெளிப்படுத்தி 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.

இப்போட்டி 1 மணி, 43 நிமிடத்துக்கு நீடித்தது. இது பென்சிக் வென்ற 3வது டபுள்யு.டி.ஏ பட்டமாகும். 2015ல் ரோஜர்ஸ் கோப்பையை வென்றதற்குப் பிறகு அவர் கைப்பற்றிய முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்த பென்சிக் (21 வயது), தற்போது மீண்டும் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தொடங்கி உள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tennis Benchmark Champion , Dubai, Tennis, bencic Champion
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி