×

ஷ்ரேயாஸ் சதத்தில் மும்பை வெற்றி

இந்தூர்: மத்தியப் பிரதேச அணியுடனான சையது முஷ்டாக் அலி டிராபி டி20 சி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த மத்தியப் பிரதேசம் 19.3 ஓவரில் 143 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பத்திதார் 47, வெங்கடேஷ் அய்யர் 29, பார்த் சஹானி 28 ரன், அபிஷேக் பண்டாரி 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர் (4 பேர் டக் அவுட்). மும்பை பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 4, முலானி, குல்கர்னி, ஷர்துல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மும்பை 16 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து வென்றது. பிரித்வி ஷா முதல் பந்திலேயே டக் அவுட்டானார். கேப்டன் ரகானே 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் - சூரியகுமார் யாதவ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்து அசத்தியது. ஷ்ரேயாஸ் 103 ரன் (55 பந்து, 5 பவுண்டரி, 10 சிக்சர்), சூரியகுமார் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது.

பீகாரை வீழ்த்தியது தமிழகம்
பீகார் அணியுடன் சூரத்தில் நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழகம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பீகார் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்தது. தமிழக பந்துவீச்சில் ஆர்.அஷ்வின், முகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தமிழகம் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து வென்றது. இந்திரஜித் 46 ரன், சதுர்வேத் 25, நிஷாந்த் 12 ரன் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 38, விவேக் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இஷான் கிஷண் 113*
மணிப்பூர் அணியுடன் கிரிஷ்ணாவில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 121 ரன் வித்தியாசத்தில் மணிப்பூர் அணியை வீழ்த்தியது. டாசில் வென்ற மணிப்பூர் முதலில் பந்துவீச, ஜார்க்கண்ட் 20 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. ஆனந்த் சிங் 26 ரன்னில் வெளியேறினார். கேப்டன் இஷான் கிஷண் 113 ரன் (62 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), விராத் சிங் 73 ரன்னுடன் (46 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய மணிப்பூர் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து தோற்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mumbai ,win ,Shreyas , Mumbai win, Shreyas iyer
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்