×

அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பெண் நியமனம்

ரியாத்:அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கசோகி கடந்த அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் சவுதி அரசு இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால், இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சவுதி தூதராக இருந்த இளவரசர் காலித் பின் சல்மான் கடும் கண்டனத்திற்கு ஆளானார். இந்நிலையில், சல்மானுக்கு பதிலாக அமெரிக்காவுக்கான புதிய தூதராக அந்நாட்டு இளவரசி ரிமா பிந்த் பண்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று பிறப்பித்துள்ளார். ரிமா, முகமது பின் சல்மானின் தங்கை ஆவார். அவர் அமெரிக்காவில் படித்தவர். மேலும், ரிமாவின் தந்தையும் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றியவர். அதோடு, முகமது பின் சல்மான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு சுதந்திரமும், கவுரவமும் அளித்து வருகிறார். அதன் அடிப்படையில் ரிமாவுக்கு தூதர் பதவி வழங்கப்பட்டிருப்பதும் சர்வதேச அரங்கில் வரவேற்பை பெற்றுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saudi ,nominee , America, Saudi ambassador
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!