×

பெங்களூருவில் நடைபெற்று வந்த விமான கண்காட்சி நிறைவு: மக்களை கவர்ந்த தேஜஸ்

பெங்களூரு: பெங்களூரு எலகங்காவில் 5 நாட்களாக நடைபெற்று வந்த விமான கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. பெங்களூரு விமான கண்காட்சி மற்றும் விமான சாகசம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் வாகன நிறுத்தம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட கார்கள் கருகின. இதைத் தொடர்ந்து 3 மணி நேரம் விமான சாகசம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மாலையில் வழக்கம் போல் விமானங்கள் வானில் தங்களின் சாகசத்தை தொடங்கின.

இதைத் தொடர்ந்து, 5வது நாளான நேற்று பகல் 10 மணிக்கு சூரிய கிரண், நேத்ரா, யாக், ருத்ரா, தேஜஸ், தனுஷ், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்கள் சாகசங்கள் செய்து, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மிகவும் தாழ்வாகவும் விண்ணில் குட்டி கரணம் அடித்தும் சாய்ந்தும் சென்ற விமானங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன. பிற்பகல் 3.30 மணி முதல் 10 நிமிடம் தேஜஸ் போர்விமானம் செய்த சாகசம், அனைவரின் மனதிலும் இடம் பிடித்தது. கடந்த ஐந்து நாளாக நடந்த விமான சாகசம் மற்றும் கண்காட்சி நேற்றுடன் நிறைவு அடைந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Airtel ,exhibition ,Bangalore ,Completed Tejas , Bangalore, AERO EXPO 2019, Exhibition, Tejas,
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...