திருமணமானவர் என்று தெரிந்தும் காதல் டார்ச்சர் இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது

கீழ்ப்பாக்கம்: ஒருதலை காதலால் திருமணமான பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிசென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (30). இவரது மனைவி சரண்யா (24). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. சரண்யா கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவன  வரவேற்பறையில் பணிபுரிந்து வருகிறார்.

இதே நிறுவனத்தில் ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த விக்டர் (41). நிர்வாக பிரிவில் வேலைசெய்து வருகிறார். சரண்யாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையறிந்த விக்டர், சரண்யாவிடம் அடிக்கடி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சரண்யா தான் திருமணமானவர் என்றும், தனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது என்றும் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், விடாமல் விரட்டிய விக்டர், திருமணமானாலும் பரவாயில்லை நான் காதலித்துகொண்டு தான் இருப்ேபன், என கூறி வந்துள்ளார். இதனால், வேறு வழியின்றி, எனக்காக நீ 5 ஆண்டுகள் காத்திருந்தால், உனது காதலை ஏற்கிறேன், என சரண்யா கூறியுள்ளார்.  இதற்கிடையில் கடந்த 1 மாதத்திற்கு முன், சரண்யா தனது கணவனுடன் ேசர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனாலும், விக்டர் என்னை காதலிக்க ேவண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

விக்டரின் தொல்லை தாங்காமல் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மேல் அதிகாரியிடம் சரண்யா புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து விக்டரை கடந்த 5 நாட்களுக்கு முன் வேலையை விட்டு நிர்வாகம் நீக்கியது. இதனால் ஆத்திரமடைந்த விக்டர் நேற்று மதியம் சரண்யாவிடம், ‘’மரியாதையாக என்னை காதலி. இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுேவன்’’ என மிரட்டியுள்ளார். அதற்கு சரண்யா, ‘’என்னை காதலிக்காதே, நான் எனது கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன்’’ என்று கெஞ்சியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த விக்டர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரண்யாவை கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சரண்யா ரத்த வௌ்ளத்தில் கீழே விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், படுகாயமடைந்த சரண்யாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும்  கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் போலீசாருடன் சென்று அந்த பகுதியில் பதுங்கியிருந்த விக்டரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More