×

பிரதமராக மோடி இருப்பதால் பாஜ.வுக்கு அறிவுரை தேவையா? : ப.சிதம்பரம் காட்டம்

புதுடெல்லி: ‘பிரதமராக மோடி இருப்பதால் பாஜ.வுக்கு யாருடைய அறிவுரையும் தேவைப்படாது’ என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.உரி தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் இருந்த 7 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி அழித்தது. இதற்கு மூளையாக செயல்பட்டவர் லெப்டினன்ட் டிஎஸ் ஹுடா. இவர் தற்போது காங்கிரசின் தேசிய பாதுகாப்பு குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பிரதமராக மோடி இருப்பதால் பாஜ.வுக்கு அறிவுரை தேவைப்படாது. அதேபோல் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் போன்றவர்களை பாஜ ஏற்காது. பிரதமராக மோடி இருப்பதால் திட்டக் குழுவும் பாஜ.வுக்கு தேவைப்படாது. ஏன் தேசிய புள்ளியல் கமிஷன் கூட தேவையில்லை. ஏன் அமைச்சரவை கூட தேவைப்படாது.  ஏனெனில், பிரதமராக மோடி இருக்கிறாரே.
மேகாலயா கவர்னர் தாத்தகாத்த ராய் காஷ்மீர் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பேசியுள்ளார். அதற்கு பிரதமர் நடவடிக்கை எதுவும் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,BJP ,forest ,P.Chidambaram , Advice, BJP, Chidambaram
× RELATED பழங்குடியின பெண்ணை குடியரசுத்...