×

நடிகை விஜயலட்சுமி உடல்நிலை பாதிப்பு

பெங்களூரு  நடிகை விஜயலட்சுமி உடல்நலக்குறைவால்  அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழில் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்  நடிகை விஜயலட்சுமி, இதே போன்று பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்தவர். மேலும் கன்னடத்தில் விஷ்ணுவர்தனுடன் சூர்யவம்சம், பிரகாஷ்ராஜூடன் நாகமண்டலா, சிவராஜ்குமாருடன் ஜோடிஹாகி ஆகிய படங்களில் நடித்தவர். இவர்  உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நடிகை விஜயலட்சுமியின் தங்கை உஷா தேவி கூறுகையில், ‘‘எனது சகோதரி விஜயலட்சுமி உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு தேவையான பணத்தை  செலவழிக்க சினிமா துறை யில் இருந்து உதவியை எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayalakshmi , Actress Vijayalakshmi, Health and Emergency Care Unit
× RELATED சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை...