×

மைனர் ஜோடிகளுக்கு டும்... டும்... டும்...

மதுரை பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை அழைத்து சென்றுவிட்டார். பின்னர் திடீரென்று ‘நாங்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம்  செய்துவிட்டோம், எங்களை சேர்த்து வையுங்கள்’ என்று கருங்கல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திருமண வயது பெண்ணுக்கு 18, ஆணுக்கு 21 என்ற போதிலும் வாலிபர் மைனராக இருந்தும் காவல் நிலைய அதிகாரி  தரப்பு காதல் ஜோடியை வரவேற்று வாழ்த்தி அனுப்பி வைத்தனர். இந்த தகவல் வெளியாகி மேல் அதிகாரிகளுக்கு தெரியவர குடைச்சல் ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாலிபரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும்,  இளம்பெண்ணை காப்பகத்திலும் சேர்த்தனர்.

இது நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் கருங்கல் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துவந்த 18 வயது பெண் ஒருவர் மாயமானார். 19 வயது மதிக்கத்தக்க நாகர்கோவில் வாலிபர்  அந்த பெண்ணை அழைத்து கருங்கல் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். ஏற்கனவே இதுபோன்ற விவகாரத்தில் சூடுபட்டதால் இதுவும் மைனர் ஜோடி என்பதால் இம்முறை யாருக்கும் தெரியாமல் இருக்க காதும் காதுமாக  வைத்தது போன்று இரவு 10 மணிக்கு மேல் காவல் நிலையத்திற்கு உள்ளே வரை அவர்கள் வந்த காரை வரவழைத்து அதில் ஜோடியை ஜோடியாகவே ஏற்றி அனுப்பி வைத்தனர். சட்டப்படி குற்றம் என்றபோதிலும் சட்டத்தை  பாதுகாக்க வேண்டிய சில காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடு பிற காவலர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minor Couples , Minor, Couples ...
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பூசாரி...