×

2001 சந்தை மதிப்பை நிர்ணயிப்பதற்கு பதில் 2016 சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயம்: தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை:தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசாணை 298/456ன் படி 2001 சந்தை மதிப்பில் கணக்கிட்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகையை உயர்த்த வேண்டும். ஆனால், அறநிலையத்துறை கடந்த 2017-18களில் அதிரடியாக 2016 சந்தை மதிப்பின்  அடிப்படையில் பல மடங்கு வாடகையை உயர்த்தி விட்டனர். கடந்த 1.7.2016 முதல் வாடகை உயர்த்தப்பட்டதாக கடந்த 2017-18ல் அறிவிப்பு கொடுத்து விட்டு வாடகை பாக்கி லட்சக்கணக்கில் இருப்பதாக வாடகை தாரர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பபட்டது.  கடந்த 2016 சந்தை மதிப்பு அடிப்படையில் வில்லிவாக்கத்தில் 150 சதவீதமும், பாடியில் 353 சதவீதமும், கொரட்டூரில் ₹200 வாடகையை ₹2 ஆயிரம் என 10 மடங்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

அரசாணையின் படி 3 வருடங்களுக்கு ஒரு முறை வாடகையை 15 சதவீதம் மட்டுமே உயர்த்த வேண்டும். திடீரென பல மடங்கு உயர்த்தி அறிவிப்பு கொடுத்து விட்டு வாடகை பாக்கி லட்சக்கணக்கில் இருப்பதாக  அறநிலையத்துறை அறிவிப்பு கொடுக்கிறார்கள். அதனால், பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அரசாணை 298/456ன்படி வாடகையை செலுத்தலாம் என்று அறிவிப்பு கொடுத்தால் அனைவரும் வழக்குகளை  திரும்ப பெற்று பாக்கியில்லாமல் வாடகையை செலுத்த 20 லட்சம் குடும்பங்களும் தயாராக இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tribunals Association , 2001 market, Tenure,Tamilnadu Temple ,Accused
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை