×

அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 5 இடம் தொகுதிகளை கைப்பற்றுவதில் கட்சியினர் மும்முரம்: டெல்லிக்கு படையெடுக்கும் தலைவர்கள்

சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 இடங்களில் நிற்க கடும் போட்டி நிலவி வருகிறது. சீட்டை பிடிக்க பலர் டெல்லி தலைமையை அணுகி வருகின்றனர்.தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த தொகுதியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் தென்சென்னை  தொகுதிக்கு பாஜ தலைவர் தமிழிசை, தமிழக பாஜ முன்னாள் தலைவர் இல.கணேசன், மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிக்கு தமிழக பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் போட்டியிட  விருப்பம் தெரிவித்து உள்ளனர். கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமாரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, தஞ்சாவூர் கருப்பு முருகானந்தம் திருப்பூர் வானதி சீனிவாசன், வடசென்னை பாஜ துணை தலைவர்  சவேரா சக்ரவர்த்தி, எம்.என்.ராஜா ஆகியோரும், பெரும்புதூர் தொகுதிக்கு பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் அ.வேத சுப்பிரமணியம் ஆகியோரும் போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ளனர். கட்சியில் அண்மையில்  இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலிக்கு சீட் கேட்டுள்ளார்.  

இப்படி பலர் பல தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், பாஜவுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை இன்னும் முழுமையாக அதிமுக அறிவிக்கவில்லை. இதனால், அனைத்து  தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் போட்டி போட்டு தெரிவித்து வருகின்றனர். வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக கட்சி மேலிடமும் ஆலோசனை நடத்தி வருகிறது. எந்த தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிந்த பின்னரே அந்த தொகுதிக்கான வேட்பாளரை கட்சி மேலிடம் தேர்வு செய்யும்.அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள பாஜ தலைவர்கள் சீட் வாங்குவதற்காக டெல்லியில் முகாமிட்டு மேலிடத்தை அணுகி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் 5 தொகுதியிலும் ஏதாவது ஒரு தொகுதியை கைப்பற்றி விட  வேண்டும் என்றும் பாஜ முக்கிய பிரமுகர்கள் பலரும் டெல்லி ஆதரவாளர்களை அணுகி வருகின்றனர். இதனால் தொகுதிகள் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு நிலவி உள்ளது. குறைவான தொகுதிகளே கிடைத்துள்ளதால் வாய்ப்பு கிடைக்காத பல முக்கிய பிரமுகர்களுக்கு வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை சீட்டை  வழங்கவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பாஜ தலைவர்கள் சீட்  வாங்குவதற்காக டெல்லியில் முகாமிட்டு மேலிடத்தை அணுகி வருகின்றனர். பாஜ முக்கிய பிரமுகர்களும் டெல்லி ஆதரவாளர்களை பின்தொடர்ந்து  வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Party ,Bhuj ,Mummuram ,AIADMK , 5 seats, Bhajan , AIADMK coalition, constituencies
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...