×

மக்களவை பொதுத்தேர்தல் 70,000 கோடி செலவாகும்: அமெரிக்க நிபுணர் கணிப்பு

புதுடெல்லி: எதிர்வரும் மக்களவைத் தேர்தல் செலவு என்பது, வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.மக்களவைக்கு 543 எம்பிக்களை தேர்வு செய்யும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை கடந்த 2016ல் நடைபெற்றது.   இதற்கான செலவு சுமார் 6.5 பில்லியன் டாலர் (₹46,150 கோடி). அதேவேளையில் கடந்த 2014ம் ஆண்டு மக்களவைக்கு நடந்த தேர்தலின் செலவு 5 பில்லியன் டாலர் (₹35,000 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தில் பொதுத் தேர்தல் என்பது உலகிலேயே அதிக செலவு மிகுந்தது என்று சொல்லக் கூடியவகையில் உள்ளது.  தற்போது நடைபெற உள்ள தேர்தல் செலவு கடந்த 2014ம் ஆண்டைவிட குறையாது  இரட்டிப்பாகத்தான் இருக்கும் (சுமார் ₹70,000 கோடி) என்று சர்வதேச அமைதிக்கான கார்நேஜி என்டோமென்ட் அமைப்பின் தெற்காசிய திட்ட இயக்குனர் மிலன் வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.






பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : LS ,US , Lok Sabha ,General, Elections 70,000 Crore, US Expert, Prediction
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது