×

பாகிஸ்தான் ஒழிக என கோஷமிட்டால் சாப்பாட்டு பில்லில் 10 சதவீதம் தள்ளுபடி: நவி மும்பை ஓட்டல் உரிமையாளர் அறிவிப்பு

நவி மும்பை: பாகிஸ்தாஸ் ஒழிக என கோஷமிடும் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கி வருகிறார் நவி மும்பையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர்.காஷ்மீர் மாநிலம், புல்வாமாவாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு  பாகிஸ்தான்தான் காரணம் என பெருவாரியான மக்கள் கருதுகின்றனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக மக்களின்  கோபம் திரும்பியுள்ளது. பாகிஸ்தானை கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், நவி மும்பையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் புதுமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நவி மும்பை, கார்கரில் ‘லக்கி தவா ஓட்டல்’ நடத்தி வருபவர் சையத் கான். இவர் தனது ஓட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் ‘பாகிஸ்தான் ஒழிக’ என கோஷமிட்டால் அவர்களது பில் தொகையில் 10 சதவீதம்  தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அவர் ஓட்டல் முன்பு ஒரு பலகையில் எழுதியும் வைத்திருக்கிறார்.இதன்படியே ஓட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு பில் தொகை செலுத்தும்போது ‘பாகிஸ்தான் ஒழிக’ என ஒரு முறைக்கு பல முறை கோஷமிடுகின்றனர். அவர்களிடம் பில் தொகையில்  இருந்து 10 சதவீதம் குறைவாக வசூலிக்கிறார் சையத் கான். சையத் கானின் இந்த அறிவிப்பால் அவரது ஓட்டலுக்கு வழக்கமான நாட்களைவிட இப்போது வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுபற்றி சையத் கான் கூறுகையில், ‘‘இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாரும் இந்தியர்கள்தான். நாங்கள் பாகிஸ்தானை கடுமையாக எதிர்க்கிறோம். புல்வாமா தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி  கொடுக்கப்பட வேண்டும். என்னை போன்றவர்கள் இப்போது ராணுவத்தில் இல்லை. இனியும் ராணுவத்தில் சேரமுடியாது. ஆனால், எங்களை போன்றவர்களால் தார்மீக ரீதியாக நமது நாட்டு ராணுவ வீரர்களுக்கு முழு ஆதரவு  அளிக்க முடியும்’’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Navi Mumbai ,Pakistani , kill Pakistan, bill, discount, Navi Mumbai hotel
× RELATED நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!!