×

ஹெட்மயர் அதிரடி சதம் 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ரன் வித்தியாசத்தில் வென்றது.கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. கிறிஸ் கேல் 50 ரன் (63 பந்து, 1 பவுண்டரி,  4 சிக்சர்), கேம்ப்பெல் 23, ஷாய் ஹோப் 33, டேரன் பிராவோ 25, கேப்டன் ஹோல்டர் 3, கார்லோஸ் பிராத்வெய்ட் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.அபாரமாக விளையாடிய ஷிம்ரோன் ஹெட்மயர் 104 ரன் (83 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ஆஷ்லி நர்ஸ் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட், பிளங்கெட், ஸ்டோக்ஸ், ரஷித் தலா 1  விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 47.4 ஓவரில் 263 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.

பென் ஸ்டோக்ஸ் 79 ரன் (85 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மோர்கன் 70 ரன் (83 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோ ரூட் 36, ஜாஸ் பட்லர் 34, ரஷித் 15, மொயீன் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில்  வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் காட்ரெல் 5, ஹோல்டர் 3, தாமஸ், கார்லோஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஹெட்மயர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது ஒருநாள் போட்டி கிரெனடாவில் நாளை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : win ,West Indies , Headmaster ,hundred, West Indies,2nd ODI
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்