சர்வதேச விமான கண்காட்சி: தேஜஸ் விமானத்தில் பயணித்தார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில், தேஜஸ் விமானத்தில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பயணித்தார். சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ம் தேதி கர்நாடகா  மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள ஏலகங்கா பகுதியில் ஜக்கூர் சர்வதேச விமானப்படை தளத்தில் தொடங்கியது. இந்த விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.  இந்த விமான கண்காட்சியில், 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 365 நிறுவனங்களின் கண்காட்சி மையங்களும் இடம் பெற்றுள்ளது. கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சர்வதேச அளவில் பல போர்  விமானங்கள் இங்கு வந்து சாகச நிகழ்ச்சி செய்துகொண்டுள்ளனர்.

இன்று 4-வது நாள் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பார்வைக்காக அனைவரையும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று, பேட்மிண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை  பி.வி.சிந்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர், தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்தார். பச்சை நிற சீருடை அணிந்து வந்த பி.வி.சிந்து, விமானத்தில் ஏறும் போது பார்வையாளர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர்  விமானத்தின் காக்பிட் பகுதியில் அமர்ந்து சிறிது நேரம் பயணித்தார். இளம் வயதில் தேஜஸ் விமானத்தில் துணை விமானியாக பயணித்தது பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று  முன்தினம் தேஜஸ் விமானத்தில் பயணித்தார். இந்த விமான கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேஜாஸ் போர் விமானம்:
* தேஜாஸ் போர் விமானமானது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம்.
* நடுவானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் வசதி கொண்டது தேஜாஸ்
* இந்திய விமானப் படையில் தேஜாஸ் போர் விமானம் இணைக்க அண்மையில் ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : International Flight Exhibition: PV Sindhu ,Tejas , International Airport Exhibition, Tejas Airplane, Pvt
× RELATED உள்நாட்டு தொழில்நுட்பத்தில்...