வேதாரண்யம் பகுதியில் கஜா புயல் தாக்கி 100 நாட்கள் ஆகியும் மீளாத கோடியக்கரை சரணாலயம்

வேதாரண்யம் :    வேதாரண்யம் பகுதியில் கஜா புயல் தாக்கி 100 நாட்கள் ஆகியும் இன்னும் மீளாத நிலையில்  கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் உள்ளது.    வேதாரண்யத்தின் அருகே கோடியக்கரை 36 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரந்து விரிந்து பசுமைமாற காடுகளைக்கொண்டது.  இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், காட்டுப்பன்றி, குரங்கு, முயல், வெளிமான், நரி, மட்டக்குதிரை போன்ற விலங்குகளும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மழை காலத்தில் இந்த பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதிக்கு 257 வகையான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் தங்கி உணவருந்தி மீண்டும் சீசன் முடிந்தவுடன் அந்தந்த நாடுகளுக்கு பறவைகள் திரும்பி செல்வது வழக்கம். இந்த வனவிலங்குகளையும் பறவைகளையும் பார்வையிட வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்வார்கள்.

சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் வனவிலங்குகளையும் பறவைகளையும் பார்வையிட கண்காணிப்பு கோபுரம் பைனாகுலர் வழிகாட்டி தங்கும் இடம் போன்ற பல்வேறு வசதிகளை செய்திருந்தனர். இந்நிலையில் கஜா புயலால் வனப்பகுதியும் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.  மேலும் மான்கள், குரங்குகள், பறவைகள் ஆங்காங்கே இறந்து கரை ஒதுங்கியது.  கடந்த 100 நாட்களுக்கு பிறகு மரங்கள் துளிர்விட்டு வளர துவங்கியுள்ளன.

தற்சமயம் வனவிலங்கு சரணலாயத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. தற்சமயம் சுற்றுலா பயணிகள் சென்று வர வனத்துறை சார்பில் கட்டணம் செலுத்தி பார்வையிட வேன் வசதி இருந்தது. தற்போது அதுவும் பயன்பாட்டில் இல்லை. சரணாலத்தில் சென்று பார்க்க இருந்த ஒரு   சாலையும் முற்றிலும் சேதமடைந்து உள்ளது.  மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பன் ஏரியில் அருகே பார்வையாளர்கள் பறவைகளை ரசிப்பதற்காக கட்டப்பட்ட டவர் கஜா புயலில் இடிந்து தரைமட்டம் ஆனது.

இடிந்த அந்த கோபுரத்தை வனத்துறையினர் இதுவரை அகற்றாமல் அப்படியே காட்சி பொருள்போல வைத்துள்ளனர்.  பறவையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிப்பு கோபுரம் இல்லாததால் பறவைகளின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.  எனவே இடிந்த கோபுரத்தை அகற்றி விட்டு புதிதாக கண்காணிப்பு கோபுரம் கட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: