நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு கொலீஜியமே காரணம்... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தகவல்

டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் தான் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஒப்புக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி சஞ்சய் கண்ணா முன் விசாரணைக்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வசம் 27 கோப்புகள் மட்டுமே உள்ளதாகவும், கொலீஜியத்திடம் 70 - 80 கோப்புகள் நிலுவையில் உள்ளதாக  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court , Judge's appointment delayed, the cause of the crime, Judge Ranjan Gogoi
× RELATED பொதுமக்கள் இனி தகவல்களை பெறலாம் தலைமை...