×

நெருங்குது பங்குனி உத்திரம் பழநி-தாராபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

* பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி :பழநி  கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கவுள்தையொட்டி தாராபுரம் சாலைகளில்  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி  கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம்.  10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா இந்தாண்டு வரும் மார்ச் 15ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழாவில் 12 லட்சத்திற்கும் அதிகமான  பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம்,  கொடுமுடியில் இருந்து காவிரி ஆற்றில் தீர்த்தக்காவடி எடுத்து பழநிக்கு  பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுபவர். இவர்கள்  பழநி-புதுதாராபுரம் சாலையிலும், கோரிக்கடவு சாலையிலும் பாதயாத்திரையாக  வருவது வழக்கம்.இவ்வாறு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக  இந்த சாலைகளில் ஏராளமான திடீர் கடைகள் முளைத்துள்ளன. இந்த கடைகளால்  பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது. மேலும்  பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே  சாலையோரங்களில் தோன்றியுள்ள திடீர் கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை  அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Marupuruthu Palani-Dharapuram , Palani, dharapuram, panguniuthiram,occupations
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி