ஹாலெப்பை வீழ்த்தினார் பெலிண்டா பென்சிக்

துபாய்: பிரபல டென்னிஸ் தொடரான துபாய் டூட்டி பிரீ மகளிர் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக், நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார். கால் இறுதியில் ஹாலெப்புடன் (ரோமானியா) மோதிய பென்சிக் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 6-4, 6-2 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அரை இறுதிக்கு முன்னேறினார். சீன தைபே வீராங்கனை சூ வெய் சை தனது கால் இறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். முன்னணி வீராங்கனைகள் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பெத் குவித்தோவா (செக்.) ஆகியோரும் அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: