×

தோகாவில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவின் நம்பர் ஒன் ரைபிள் வீரர் சென்னை விமான நிலையத்தில் தவிப்பு: பந்தய துப்பாக்கியுடன் செல்ல அனுமதி மறுப்பு

சென்னை: தோகாவில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க செல்ல சென்னை விமான நிலையம் வந்த இந்தியாவின் நம்பர் ஒன் ரைபிள் வீரர் அதிகாரிகள் கெடுபிடியால் விமான நிலையத்தில் தவித்தார்.  தோகாவில் சர்வதேச துப்பாக்கிசுடும் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவின் நம்பர் ஒன் ரைபிள் வீரரான புதுக்கோட்டையை சேர்ந்த பிரித்வி தொண்டைமான் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவரிடம் அதிகாரிகள், துப்பாக்கி எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றனர். உடனே உரிய ஆவணங்களை காண்பித்தார்.  ஆனால் போட்டியில் கலந்துகொள்ளும் 10 பேருக்கும் சேர்த்து இருக்கிறது. உங்களுக்கு என்று தனியாக அனுமதி இல்லை. எனவே, உங்களை அனுப்பமாட்டோம் என்றனர்.

இதேபோட்டியில் கலந்துகொள்ளும் மற்ற வீரர்கள், டெல்லியில் இருந்து இதே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரே அனுமதி கார்டுடன் துப்பாக்கிகளை எடுத்து செல்வதாகவும் அவர் கூறினார். இருப்பினும் அதிகாரிகள் பிரித்வியை அனுமதிக்கவில்லை.  இதனால் அதிகாலை 3.30 மணிவரை பாதுகாப்பு மற்றும் இண்டிகோ அதிகாரிகளிடம் போராடி பார்த்துவிட்டு விமானத்தில் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றார்.
இதுபற்றி நேஷனல் ரைபிள் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக இண்டிகோ அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் பகலில் ரைபிள் வீரர் பிரித்வி தொண்டைமானுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி அளித்தது. அவர் அன்று இரவு மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து தோகா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் பிரித்வி தொண்டைமான் அளித்த பேட்டி: சென்னை விமான நிலையத்தில் நடந்த குளறுபடியால் பயிற்சி போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. இனி நான் நேரடியாக போட்டியில்தான் கலந்து கொள்ள முடியும். ஆனாலும் விமான நிலைய சம்பவத்தை மறந்துவிட்டு முழு கவனத்தையும் செலுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tournament ,shooter ,rider player ,Doha ,India ,Chennai ,airport , Doha, International Shooting Range, India, Number One Rifle Player, Chennai Airport,
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி