பாகிஸ்தானுக்கு எதிராக 2 புள்ளிகளை எளிதாக விட்டுக்கொடுக்க கூடாது : சச்சின்

உலக கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் விளையாடாமல் 2 புள்ளிகளை
 கொடுப்பது தனக்கு வெறுப்பை தரும் என்று கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் தெரிவித்துள்ளார். மேலும்  உலக கோப்பை போன்ற மிக பெரிய தொடரில் விளையாடாமல் எதிரணிக்கு 2 புள்ளிகளை விட்டுக்கொடுக்க கூடாது என்றும் உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் இதுவரை தோற்றதில்லை அதை நிரூபிக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார். நாம் விளையாடாமல் இருந்தால் கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேற நாமே வழி ஏற்படுத்தி கொடுத்தது போல் ஆகிவிடும் எனவும் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.  மேலும் தமக்கு நாடு தான் முக்கியம் என்றும் நாடு என்ன முடிவு எடுக்கிறதோ அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sachin ,Pakistan , Pakistan , world cup,Sachin Tendulkar, India, Terror attack
× RELATED விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும்...