×

உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் : பிசிசிஐ

டெல்லி :  உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ  நிர்வாக அதிகாரி வினோத் ராய் தெரிவித்துள்ளார். பிசிசிஐ-யின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது, இதை பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் புல்வாமா தாக்குதல் தொடர்பாகவும் இங்கு இருக்கும் சூழ்நிலைகள் தொடர்பாகவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

alignment=


கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது வீரர்கள் மட்டுமின்றி அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்காலத்தில் பயங்கரவாதிகளுக்கு துணை போகும் நாடுகளுடன் கிரிக்கெட் விளையாட தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் கிரிக்கெட் சமூகத்திற்கு தெரிவித்து கொள்வதாகவும் பிசிசிஐ  நிர்வாக அதிகாரி வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை போட்டியில் இந்தியா அணி , பாகிஸ்தான் அணியை ஜூன் 16ம் தேதி தான் விளையாடவுள்ளது. அதற்கு இன்னும் அவகாசம் உள்ளது என்றும் இந்தியா அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் பிசிசிஐ  நிர்வாக அதிகாரி வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

alignment=


ஐ.பி.எல் தொடக்க விழா ரத்து

வழக்கமான ஐபிஎல் தொடக்க வில்லா இந்தாண்டு நடைபெறாது என்று தெரிவித்துள்ளார். அதற்கு செலவாகும் தொகை பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க நிர்வாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இளம் வீரர் சாஹல் கருத்து :

alignment=


இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இளம் வீரர் சாஹல்  பாகிஸ்தான் அணியுடன் பிசிசிஐ  அனுமதி அளித்தால் விளையாடுவோம் என்றும் அனுமதி அளிக்கவில்லையென்றால் விளையாட போவது இல்லை என்றும் தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக போராட வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள அனைவரும் பயங்கரவாதிகள் இல்லையென்றும் ஆனால் தப்பு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BCCI ,India ,World Cup ,Pakistan , Central Government,World cup ,india ,india ,BCCI
× RELATED அணியின் நலனுக்காக புதிய...