×

குமரி-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை: ரயில்வே இடத்தில் இருந்த 62 வீடுகள் அகற்றம்

குமரி: நாகர்கோவிலில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 62 வீடுகள் பலத்த பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் ரயில்வேக்கு சொந்தமான பறைகிங்கால் என்ற இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 62 வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. வீடுகள் அகற்றப்பட்டதால் பறைகிங்காலில் 40 ஆண்டுகளாக வசித்து வந்த மக்கள் கண்ணீருடன் தெரு ஓரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் தங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்தியஅரசு கடந்த 2017ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதில், மதுரை - வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் ஆகிய பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை அமைக்க நான்காயிரத்து இருநூற்று ஐம்பது கோடி ரூபாயில் திட்டம் தயார் செய்யப்பட்டது. அந்த திட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் இதற்கான பணிகள் துவக்கப்பட்ட நிலையில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 62 வீடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த பணிகளுக்காக 100க்கும் மேற்பட்ட ரயில்வே அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : houses ,Trivandrum ,Kumari ,railway , Kumari-Trivandrum,double railway,occupation,housing,removal
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...