×

ஐசிஐசிஐ வங்கியில் மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி முறைகேடாக கடன் வழங்கியதாக சந்தா கோச்சார் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக பணிபுரிந்த அதிகாரி சந்தா கோச்சர். இவர் வீடியோகோன் நிறுவனத்துக்கு கடந்த 2009 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில் ரூ. 3250 கோடி மதிப்புள்ள கடனை ஆறு தவணைகளில் அளித்துள்ளார்.

விடியோகோன் நிறுவனம் அதை திருப்பிச் செலுத்தாததால் சிபிஐ விசாரணை செய்தது. அந்த விசாரணையில் வங்கி அதிகாரி சந்தா கோச்சாரின் கணவருக்கு வீடியோகோன் நிறுவன அதிபரின் துணை நிறுவனம் ஒன்று ரூ.64 கோடி அளித்தது தெரிய வந்தது. இந்த துணை நிறுவனம் வங்கிக் கடன் பெற சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகோன் அதிபர் வேணுகோபல் லஞ்சமாக அளித்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், விடியோகோன் அதிபர் வேணுகோபல் உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தா கோச்சார் உள்ளிட்டோருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது. இந்த நோட்டிஸ் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் இமிக்ரேஷன் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICICI ,Subada Kochar , ICICI, Bank, santha kochhar, Videocon, CBI
× RELATED இறங்குமுகம் காணும் பங்குச்சந்தை...