×

பிச்சைக்காரர்களே இல்லாத இந்தியா நடை மூலம் விழிப்புணர்வு

* திண்டுக்கல் வந்த டெல்லி வாலிபர்

திண்டுக்கல் :  பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நடந்து சென்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் டெல்லியை சேர்ந்த பொறியாளர் நேற்று திண்டுக்கல் வந்தார். புதுடெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர் அஷிஸ்வர்மா (29). பொறியாளர். பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவை வலியுறுத்தி இவர் நாடுமுழுவதும் 17 ஆயிரம் கிமீ. நடந்தே சென்று வருகிறார். கடந்த 20ம் தேதி மதுரை வந்த இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு தேசிய கொடியை ஏந்தியபடி வந்தார்.

இதுகுறித்து அஷிஸ்வர்மா கூறுகையில், ‘ஒருமுறை ரோட்டில் ரத்தம் வழிந்த நிலையில் ஒரு சிறுவன் பிச்சை எடுத்து கொண்டிருந்தான். அவனை மீட்டு காப்பகத்தில் சேர்த்தேன். இதுபோன்ற நிலை இந்தியாவில் யாருக்கும் ஏற்படக்கூடாது. பசிக்காக மற்றவர்களிடம் கையேந்த கூடாது என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணமாக சென்று வருகிறேன். 2017 ஜம்மு காஷ்மீரில் துவங்கி இதுவரை பல்வேறு மாநிலங்கள் வழியே பல ஆயிரம் கிமீ சென்றுள்ளேன்.
போகும் வழியில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன.

உணவு, தங்குமிடம், மொழி உள்ளிட்ட சிக்கல் இருந்தாலும் பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பயணித்து வருகிறேன். முடிவில் பிரதமர் மோடியை சந்திக்கவும் எண்ணியிருக்கிறேன்’ என்றார். சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி வழியாக சென்னை சென்று மார்ச் முதல் வாரத்தில் அந்தமான் நிக்கோபார் பகுதிக்கும் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India , beggars,Awareness ,Delhi Engineer,walking
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!