×

திடீர் கடல் சீற்றம், பெரியதாழையில் தடுப்பு சுவர் இடிந்தது : குடியிருப்புக்குள் கடல்நீர் புகும் அபாயம்

சாத்தான்குளம்: பெரியதாழையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கரையோர தடுப்புச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கடல்நீர் குடியிருப்பு பகுதியில் புகும் நிலை உருவாகியுள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் அருகே  பெரியதாழையில் தூண்டில் வளைவு குறைவாக அமைக்கப் பட்டுள்ளதால் கடல் அரிப்பு அதிகரித்து மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  தூண்டில் வளைவை நீட்டித்து சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்க  வலியுறுத்தியதையடுத்து   சண்முகநாதன் எம்எல்ஏ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழக முதல்வரிடம் மனு அளித்தனர். சட்டமன்ற கூட்டத் தொடரில் பெரியதாழையில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும் சிறு மீன் பிடித்துறைமுகம் அமைக்க ரூ. 53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெரியதாழையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கரையோர தடுப்புச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பெரியதாழை மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் கெனிஷ்டன் கூறுகையில், பெரியதாழையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 45  மீட்டர் அளவில் கடலுக்கும், குடியிருப்புக்கும் இடையை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது கடல் அரிப்பு அதிகமாக காணப்பட்டதால்  கீழத்தெருவில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கடல் நீர் வீடுகள் உள்ள பகுதிக்கு வந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆதலால் அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து பெரியதாழை மீனவர்கள் நேற்று  கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : watershed , Sea, outrage,periyathalai
× RELATED கோவையில் நடைபெறும் திறன் மேம்பாட்டு...