×

கேரள எதிர்க்கட்சித் தலைவர் மகன் திருமணம் வைகோ நேரில் வாழ்த்து

சென்னை: கேரள காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் - கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதலா மூத்த மகன் ரோகித்துக்கும், மருத்துவர் ஸ்ரீஜாவுக்கும் கடந்த 17ம் தேதி எர்ணாகுளத்தில் திருமணம் நடந்தது. பிப்ரவரி 21ம் தேதி மாலை மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கேரள மாநில அரசியல் மோதலில் இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டதால், நடைபெற இருந்த தனது இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரமேஷ் சென்னிதலா ரத்து செய்தார். கடந்த 25 ஆண்டுகளாக ரமேஷ் சென்னிதலாவுடன் அரசியல் எல்லை கடந்து வைகோ நட்புகொண்டு பழகி வந்ததால், வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், அவரது இல்லத்துக்கு வைகோ, அவரது துணைவியார் ரேணுகாதேவி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Opposition Leader ,Kerala , Kerala Opposition Leader's son, Marriage, Vaiko
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...