×

2018-19 நிதியாண்டுக்கான பிஎப் பணத்துக்கு வட்டி 8.65 சதவீதமாக உயர்வு: இதுவரை பிஎப் வட்டி

* 2005-06 நிதியாண்டு முதல் 2009-10 நிதியாண்டு வரை பிஎப் வட்டி மாற்றமின்றி  8.50 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு 2014-15 நிதியாண்டு தவிர ஆண்டு தோறும்  வட்டி விகிதம் மாற்றப்பட்டு வந்துள்ளது

புதுடெல்லி: 2018-19 நிதியாண்டுக்கு தொழிலாளர்களின் பிஎப் பணத்துக்கான வட்டி 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தெரிவித்தார். தொழிலாளர்களின் பிஎப் பணத்துக்கு ஆண்டு தோறும் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. நடப்பு 2018-19 நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்கான கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய வாரிய அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் கூறியதாவது:  நடப்பு நிதியாண்டுக்கான பிஎப் வட்டி 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 8.55 சதவீதத்தை விட இது அதிகம். கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். இதனால் 6 கோடி பிஎப் சந்தாதாரர்கள் பலன் பெறுவார்கள் என்றார். நிதியமைச்சக ஒப்புதல் கிடைத்ததும், தொழிலாளர்களின் பிஎப் கணக்கில் வட்டித்தொகை வரவு வைக்கப்படும்.  கடந்த 2017-18 நிதியாண்டில் பிஎப் வட்டி 8.55 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது 5 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வட்டி என்பதால், தொழிற்சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன.  தேர்தல் நெருங்குவதால் வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PF Money, PF Interest
× RELATED டெல்லி வக்பு வாரிய பணி நியமன முறைகேடு...