×

பாஜவைவிட பா.ம.க.வுக்கு அதிக தொகுதிகள் எப்படி?: பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

நாகர்கோவில்: `பா.ஜனதாவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களை அளித்துள்ளதை கூட்டணி என்ற கண்ேணாட்டத்தில்தான் பார்க்கிறேன்’ என்று  பொன்.ராதாகிருஷ்ணன்விளக்கமளித்துள்ளார். நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம்  கூறியதாவது: தேமுதிகவுடன் கூட்டணி குறித்து அதிமுகதான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார் என  நம்புகிறேன்.  அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் அளித்துள்ளதை கூட்டணி என்ற கண்ேணாட்டத்தில்தான்  பார்க்கிறேன்.

கன்னியாகுமரி தொகுதியில், 1998 முதல் பா.ஜனதாவில் யாரும் போட்டி போட  கேட்கவில்லை. இதனை வைத்துதான் தளவாய்சுந்தரம் என்னை கன்னியாகுமரி  வேட்பாளராக கூறியிருக்கலாம். குமரியில் கடந்த 4 ஆண்டுகளாக அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.  எனவே மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினருமே பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PMG ,BJP , BJP, PM, Ponnarathakrishnan
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...