×

ஏழைகளுக்கு அரசின் ரூ.2 ஆயிரம் உதவிதொகை கிடைக்க கூட்டணி கட்சியுடன் இணைந்து பாமக செயல்பட வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அரசின் சார்பில்  உழவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கும் பயனாளிகளை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இதற்காக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், புகைப்படங்கள், நியாயவிலைக் கடைகள், சிட்டா நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள்,  வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். அதேபோல், மாநில அரசு சார்பில் ஒருமுறை மட்டும் வழங்கப்பட உள்ள ரூ.2000 நிதி உதவி  பெற விண்ணப்பப் படிவம் எதுவும் தாக்கல் செய்ய தேவையில்லை.

 பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் பகுதியிலுள்ள ஏழை, எளிய அமைப்புசாரா தொழிலாளர்களையும், உழவர்களையும் அணுகி  மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற விண்ணப்பித்து விட்டார்களா என்பதை விசாரிக்க வேண்டும். இந்த திட்டங்களின்படி நிதியுதவி வழங்கும் பணி வரும் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டங்களின் பயன்களை  தகுதியானவர்களுக்கு பெற்றுத் தருவதில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் ஒருங்கிணைந்து நிர்வாகிகள் செயல்பட  வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramalinga ,coalition party ,poor , Poor, scholarship, coalition party, pamaga, ramadas
× RELATED டெல்லியில் ஜூன் 1-ல் பிற்பகல் 3 மணிக்கு...